கிறிஸ்துமஸ் ஆராதனை 25.12.2018
போதகர்., எல்.ஆரோக்கியநாதன்
எருசலேம் ஜெப சபை, எழும்பூர், சென்னை
" கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார் "
மத்தேயு 1:16
எப்படிப்பட்ட கிறிஸ்து ?
1. இராஜாவாகிய கிறிஸ்து - அடையாளமாய் மாற்றுவார்
மாற்கு 15:32
நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
2. நசரேயனாகிய கிறிஸ்து - சொஸ்தமாக்குவார்
அப்போஸ்தலர் 3:6
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;
அப்போஸ்தலர் 3:9
அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:
அப்போஸ்தலர் 3:10
தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
3. பஸ்காவாகிய கிறிஸ்து - பாதுகாப்பார்
I கொரிந்தியர் 5:7
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
4. ஜீவனாகிய கிறிஸ்து - கனப்படுத்துவார்
கொலோசெயர் 3:4
நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
5. பிரதான ஆசாரியராகிய கிறிஸ்து - நன்மை வரப்பண்ணுவார்
எபிரெயர் 3:1
இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
For Contact: Pastor L.Arokianathan
No. 11, Sundara Rao Naidu Street,
Egmore, Chennai - 600 008.
Near : Children's Hospital & Presidency School for Girls
9791192427 & 9445419067
Mail id : arokianathanl67@gmail.com