எருசலேம் ஜெப சபை 2017 செப்டம்பர் மாத வாக்குத்தத்தம்
போதகர்., எல்.ஆரோக்கியநாதன்
எருசலேம் ஜெப சபை, எழும்பூர், சென்னை
Date : 1.09.2017
" இரட்டிப்பான நன்மையைத் தருவேன் இன்றைக்கே தருவேன் "
சகரியா 9:12
நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
எதை இரட்டிப்பாய் தருவார் ? அதனால் வரும் பலன் என்ன ?
1. இரட்டிப்பான பணத்தை தருவார் (ஆசீர்வாதம்)
ஆதியாகமம் 43:15
அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள்.
உபாகமம் 15:18
அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
2. இரட்டிப்பான பங்கை தருவார் ( சந்தோஷம் )
I சாமுவேல் 1:5
அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
ஆதியாகமம் 43:34
அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.
3. இரட்டிப்பான அபிஷேகத்தை தருவார் ( பாதுகாப்பு )
II இராஜாக்கள் 2:9
அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
I சாமுவேல் 24:6
அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,
4. இரட்டிப்பான சுதந்திரத்தை தருவார் ( விடுதலை )
ஏசாயா 61:7
உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்.
ஏசாயா 40:1
என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;
ஏசாயா 40:2
எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.
5. இரட்டிப்பான கனத்தை தருவார் ( விசேஷமாக்குவார் )
I தீமோத்தேயு 5:17
நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.
II தீமோத்தேயு 2:20
ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
II தீமோத்தேயு 2:21
ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.
ஆமென்
Contact Details :
Pastor L.Arokianathan
No. 11, Sundara Rao Naidu Street,
Egmore, Chennai - 600 008.
Near : Children's Hospital & Presidency School for Girls
9791192427 & 9445419067
Mail id : arokianathanl67@gmail.com