எருசலேம் ஜெப சபை 3 ஆம் ஆண்டு விழா ஆராதனை
போதகர்., எல்.ஆரோக்கியநாதன்
எருசலேம் ஜெப சபை, எழும்பூர், சென்னை
15.04.2018
செப்பனியா 3:16
அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.
தேவாதி தேவன் எருசலேம் சபையை பார்த்து சொல்லுகிற ஒரு காரியம் தளரவிடாதே என்று சொல்லப்படும். ஏனென்றால் நாம் ஆரம்பித்த நாட்களிலே அநேக தளர்ச்சிகள் வந்தது. இருதயங்கள் தளர்ந்து போனது, முழங்கால்கள் தளர்ந்து போனது, இப்படி பல பிரச்சினைகளை கடந்து வந்தோம். ஆனால் கர்த்தர் சொல்கிறார்.
இன்றைக்கு நம்மை தளர பண்ணினவர்கள் யார் ?
எந்த காரியங்கள் தளரப்பண்ணியது ?
அந்த தளரப்பண்ண காரியங்களை இந்த நாளில் இருந்து தேவன் அகற்றி போடப்போகிறார்.
1. துஷ்டர்களை அழித்து இரட்சிப்பை தருவார்
துஷ்டர்கள் நம்மை தளரப்பண்ணினார்கள்
எஸ்றா 4:4
அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,
எஸ்றா 4:5
பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்டகாலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலி கட்டினார்கள்.
எஸ்றா 4:6
அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்.
நாகூம் 1:15
இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன்பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான்.
எருசலேமே உனக்கு இரட்சிப்பு உண்டு
ஆபகூக் 3:13
உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்;
ஆபகூக் 3:14
என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே பட்சிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது, நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவக் குத்தினீர்.
ஆபகூக் 3:15
திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.
ஆபகூக் 3:16
நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
2. ஆபத்துகளை அகற்றி ஆதரவாய் இருப்பார்
ஆபத்துகள் நம்மை தளரப்பண்ணியது
சங்கீதம் 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.
சங்கீதம் 77:3
நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்துபோயிற்று.
சங்கீதம் 77:4
நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்.
எருசலேமே உனக்கு ஆதரவு உண்டு
சங்கீதம் 18:18
என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
சங்கீதம் 18:19
அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
தேவ பிள்ளைகளே கர்த்தருடைய ஆதரவு இந்த நாளில் இருந்து உங்களுக்கு இருக்கப்போகிறது.
ஏசாயா 31:5
பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.
3. அபகரிக்கிற ஜனங்களை அகற்றி விருத்தி அடையச்செய்வார்
அபகரிக்கும் கூட்டம் நம்மை தளரப்பண்ணியது
ஏசாயா 33:23
உன் கயிறுகள் தளர்ந்துபோம்; பாய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும் பாயை விரிக்கவுங் கூடாமற்போம்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள்.
II சாமுவேல் 5:6
தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.
எருசலேமே உனக்கு விருத்தி உண்டு
II சாமுவேல் 5:7
ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
II சாமுவேல் 5:8
எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.
II சாமுவேல் 5:9
அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.
II சாமுவேல் 5:10
தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
ஜனங்கள் நம்மை அபகரிக்க நினைத்தாலும் கர்த்தர் அவற்றை முறியடித்து நம்மோடு கூட இருந்து நாளுக்கு நாள் நம்மை விருத்தி அடையச்செய்வார். அபகரிக்கிற ஜனங்கள் இனி நம்மை தளரவிட பண்ணமாட்டார்கள்.
4. துர்ச்செய்தியை கலங்கடித்து உன்னை அதிபதியாய் மாற்றுவார்
துர்ச்செய்திகள் நம்மை தளரப்பண்ணியது
எசேக்கியேல் 21:7
நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால் இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
துர்ச்செய்தி நம்மை கலங்க பண்ணியது. கர்த்தர் அதை கலங்கடிப்பார் துர்ச்செய்தியை கொண்டு வருகிற ஜனங்களை கலங்கடித்து கர்த்தர் நமக்கு செய்கிற நன்மையை பாருங்கள்.
எருசலேமே நீ அதிபதி ஆவாய்
தானியேல் 5:6
அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.
தானியேல் 5:7
ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.
தானியேல் 5:16
பொருளை வெளிப்படுத்தவும் கருகலானவைகளைத் தெளிவிக்கவும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போது நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான்.
5. பெலவீனங்களை நீக்கி நன்மை செய்வார்
பெலவீனங்கள் நம்மை தளரப்பண்ணியது
எபிரெயர் 12:12
ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள், திரும்ப நிமிர்த்தி,
எபிரெயர் 12:13
முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.
எருசலேமே உனக்கு நன்மை உண்டு
கலாத்தியர் 6:9
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
கலாத்தியர் 6:10
ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
For Contact: Pastor L.Arokianathan
No. 11, Sundara Rao Naidu Street,
Egmore, Chennai - 600 008.
Near : Children's Hospital & Presidency School for Girls
9791192427 & 9445419067
Mail id : arokianathanl67@gmail.com