எருசலேம் ஜெப சபை பிப்ரவரி 2018 வாக்குத்தத்தம்
போதகர்., எல்.ஆரோக்கியநாதன்
எருசலேம் ஜெப சபை, எழும்பூர், சென்னை
1.02.2018
" நானே அறிவித்து விளங்கப்பண்ணினேன் "
ஏசாயா 43:12
நானே அறிவித்து விளங்கப்பண்ணினேன்
எதை விளங்கப்பண்ணுவார் ?
1. அதிசயம் விளங்கப்பண்ணுவார் (கிருபை )
நியாயாதிபதிகள் 13:18
அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
நியாயாதிபதிகள் 13:19
மனோவா போய், வெள்ளாட்டுக் குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.
2. அவர் நாமத்தை விளங்கப்பண்ணுவார் (ஆரோக்கியம் )
I இராஜாக்கள் 9:3
கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.
3. வல்லமை விளங்கப்பண்ணுவார் ( பெலன்)
லூக்கா 5:17
பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.
4. ரகசியம் விளங்கப்பண்ணுவார் (செல்வம்)
கொலோசெயர் 1:27
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
5. வசனத்தை விளங்கப்பண்ணுவார் (ஜெயம்)
எபிரெயர் 7:28
நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.
ஆமென்
For Contact: Pastor L.Arokianathan
No. 11, Sundara Rao Naidu Street,
Egmore, Chennai - 600 008.
Near : Children's Hospital & Presidency School for Girls
9791192427 & 9445419067
Mail id : arokianathanl67@gmail.com